இமயமலை உருவான கதை - The story of the Himalayas

               இமயமலை உருவான கதை 







20 கோடி வருடங்களுக்கு முன்பு இந்தியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா என எல்லா நாடுகளும் கண்டங்களும் ஒன்றாக ஒரே நிலத்திவாகவே   காணப்பட்டது.இதை பாஞ்சியா என அழைப்பார்கள் காலப்போக்கில் கண்ட நகர்வு கொள்கையின்படி கண்டங்கள் பிரிந்து செல்ல தொடங்கியது அதாவது தகட்டசைவு செயன்முறையின் காரணமாக தகடுகள் அசைந்து கண்டங்கள்  பிளவுபடலாயிற்று.

இவ்வாறு கண்டங்கள் உடைந்து செல்லும்போது ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா உடைந்து யுரேசியா தகட்டை நோக்கி வடதிசையில் பயணித்தது  இந்தியா தகடு இவ்வாறு  நகர்ந்து செல்லும் போது அதன் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தது இதனால் அச்சமயத்தில் இந்தியா ஒரு பெரும் தீவாக இருந்தது.

 இந்தியாவை சுற்றி இருந்த  கடல் தெத்திஸ் கடல் என அழைக்கப்படும் இந்தியா யுரேஷியாவை நோக்கி நகர்ந்து செல்லும்போது அதன் இடையிலிருந்து சமுத்திரத்தகட்டையும் தாண்டி இழுத்துக் கொண்டு சென்றது இதன் போது  யுரேசிய தகடு வலிமையானதும் அடர்த்தியான தகடு என்பதனால் யுரேஷியா தகடுடன் மோதியதால் சமுத்திரத் தகடு அமிழ்ந்து  இந்தியா தகடு மடிப்பு மலைகளாக புடைத்து நின்றது.


சமுத்திர தகடு அமைந்து சென்றதன் காரணமாக மாக்வானது வெளியேற்றப்படும் இச்செயற்பாடு யுரேசிய தகட்டின்  முன்பக்கதக ட்டில்  எரிமலைக்குழம்பு வெளியேற்றப்படும். இவ்விடத்தில் எரிமலைகள் உருவாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

தகடுகளுக்கு இடையில் அடர்த்தி மாற்றம் காணப்படுவதால் இந்தியா தகட்டின் வேகம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியாவிடினும் தகட்டின் கீழுள்ள மேல் இடை யோட்டி மாக்மா  அதிகமாக  இருந்தாலும் தகடு  நகரும் வேகம் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகவே ஒரு கண்டம் 5 சென்டிமீட்டர் அல்லது அதற்கும் கீழ்   தான் நகர்ந்து செல்லும். ஆனால் இந்தியா இதை விட நான்கு மடங்கு வேகத்தில் சென்று யுரேசியா தகட்டுடன்  மோதியுள்ளது .

இவ்வாறு வேகமாக வந்து மோதிய  சமுத்திர தகடும்  அமிழந்து   அதனோடு சேர்ந்து இந்தியா நிலத்தினிவும்  அமிழ்ந்து இருக்க வேண்டும். ஏனெனில்  யுரேசியா தகடு   அடர்த்தி கூடியது ஆனால் இந்தியா தகடு யுரேசியா தகட்டை விட பலம் குறைந்தது இதனால் இந்தியா தகடும் அமிழ்ந்திருக்க  வேண்டும்.

மாறாக இந்தியா தகடு  அமிழ்ந்து போகாமல் ஒன்றன் மீது ஒன்றாக மேல் உயர்ந்து உள்ளது காரணம் யூரேசியா தகடு பலமானதாக இருந்தாலும் இந்தியா தகடு நகர்வு வேகம் அதிகம் என்பதனால் அது அமிழ்ந்து போகாமல்    மடிப்பு மலைகளை தோற்றுவித்து உலகின் பிரம்மாண்டமாக மாறி உள்ளது.

இவ்வாறு இரு தகடுகளும் ஒன்றின் மீது இன்னொன்று ஏறி வந்ததால் அங்கு சமுத்திர தகடுகள் அமிழ்ந்ததால் உருவான சிறிய எரிமலைகள் அனைத்தும் மூடப்பட்டது.

இந்தியா தகடு தொடர்ச்சியாக யுரேசியாவுடன் மோதிக் கொண்டு இருப்பதால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் வருடத்திற்கு ஒரு சென்டிமீட்டர் என உயர்ந்து கொண்டே செல்கிறது தற்போதைய உயரம் 8848 மீட்டர் உள்ளது இவ்வாறு இந்த நகர்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருப்பதால்இமயமலைப் பகுதிகளிலும் நேபாளம் போன்ற நாடுகளிலும் மண்சரிவு என்பன தொடர்ந்து நடைபெறுகிறது பல கோடி வருடங்களாக உருவாகி உள்ள  இந்த இமயமலை மூலம் நமக்கு பல சாதகமான விடயங்களும் உண்டு. 

மத்திய ஆசியாவின் குளிர்  மற்றும் வறண்ட காற்றில் இருந்து இந்தியாவை காப்பாற்றுகிறது மேலும் இது இந்திய பெருங்கடலில் மழை நிறைந்த பருவக்காற்று வட நாடுகளுக்கு  கடத்தப்படுவதை தடுக்கிறது மற்றும் வட இந்தியாவில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது இமயமலை இல்லை என்றால் இந்தியா நாடு தார் பாலைவனம் போல் தரிசாக தான் இருந்திருக்கும்.
  
YouTube
Formation of Himalayas HD - YouTube




 References  

https://youtu.be/V1YMTp7yEsE


India vs Russia Geography Stats Compared - NationMaster

NationMaster
https://www.nationmaster.com › country-info › compare

Post a Comment

0 Comments