காஸ்ட் பிரதேச நிலவுருவங்கள்

 காஸ்ட்  பிரதேச  நிலவுருவங்கள்





சுண்ணக்கல் பாறை மற்றும் தொலமைட் முதலிய காபனேற் பாறைகளை கொண்ட பிரதேசங்கள்  காஸ்ட் பிரதேசம் அல்லது காசித்து
எனப்படுகின்றன. 

இத்தகைய பாறைகள் இலகுவில் கரையக்கூடிய தன்மை உடையனவாகவும் மூட்டுக்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன . 

இப் பிரதேசத்தில் மேற்பரப்பு நீரின் செயற்பாட்டை விட தரைகீழ் நீரின் செயற்பாட்டினையே அதிகளவில் அவதனிக்கலாம் . 


உலகில் காணப்படும் சுண்ணகற் பிரதேசங்கள்

  • மத்திய அமெரிக்கா :  யுகாட்டான் தீபகற்பம்
  • ஸ்லோவேனியா  :  காஸ்ட் பிரதேசம் 
  • ஆப்பிரிக்கா  : மடக்கஸ்க்கார் , தென் ஆப்பிரிக்கா 
  • ஆசிய : சீனா, ஜோர்ஜியா , இந்தியா , இலங்கை , லெபனான் . மலேசியா ஜப்பான் 
  • ஐரோப்பா : யுகோஸ்லாவியா அல்பேனியா ஸ்வீடன் ஸ்பெயின் 
  • வட அமெரிக்கா : கனடா மெக்சிகோ அமெரிக்கா
  • மத்திய அமெரிக்கா : கியூபா டொமினிகன் ஜமேக்கா பொட்டாரிக்கா
  • தென்அமெரிக்கா : சிலி 
  • இலங்கை :  வடக்கில் மயோசின் சுண்ணக்கல் வவுல்பனை தரைக்கீழ் குகை



காஸ்ட் நிலவுருவங்களின் உருவாக்கமும் தரைக்கீழ் நீரின் செயற்பாடுகளும்

தரைக் நீரின் அரிப்பு செயல்முறை புவி மேற்பரப்பின் மேல் இடம்பெறாமல் கீழ்ப்பகுதியில் இடம்பெறும் வளிமண்டலத்தில் மழை நீர் காபனிராக்சைடுடன் கரைந்து கார்பன் அமிலத்தை உருவாக்கும்.

வ் அமில மழை நீர்  சுண்ணகற்பாறை துவாரம் ஊடாக உட்புகுந்து அறிதலுக்கு உட்படுத்துகிறது. 
   
நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கு இடையேயான இரசாயன எதிர்வினை: CO 2 ( g ) கார்பன் டை ஆக்சைடு + H 2 O ( l ) நீர் ⇔ H 2 CO 3 ( aq ) கார்போனிக் அமிலம்.

சுண்ணாம்பு (கால்சியம் கார்பனேட் CaCO 3 ) என்பது ஒரு வகை கார்பனேட் வண்டல் பாறை ஆகும், இது சுண்ணாம்புப் பொருளின் முக்கிய ஆதாரமாகும். இது பெரும்பாலும் CaCO 3 இன் வெவ்வேறு படிக வடிவங்களான கால்சைட் மற்றும் அரகோனைட் தாதுக்களால் ஆனது . இந்த தாதுக்கள் கரைந்த கால்சியம் கொண்ட தண்ணீரில் இருந்து வெளியேறும் போது சுண்ணாம்புக் கல் உருவாகிறது .
சுண்ணகற்பாறை உருவாகும் பிரதான இரண்டு முறைகள்
  1. பொறிமுறை { உயிர் சுவட்டியல் முறை } 
  2.  இரசாயனவியல் முறை
 

     காஸ்ட் பிரதேச அரித்தல் நிலவுருவங்கள்


அரித்தல் நிலவுருவங்கள்

  1. லாபிஸ்
  2.  போனார்
  3. டொலைன்
  4. உவாலாஸ் 
  5. போல்ஜே 
  6. குகை 

படிதல் நிலவுருவங்கள்

  1. கசிந்துளி  படிவு
  2. கசிந்துளி வீழ்வு 
  3. தூண்கள் 
  4. பொற்படிவு

அரித்தல் நிலவுருவங்கள்




01.லாபிஸ் 

சுண்ணகல் பிரதேசத்தில் இலகுவில் கரைக்க முடியாத  வன்பாறை காணப்படும் போழுது சூழ உள்ள  மென்பாறைகள் அரிப்புக்கு உட்பட்டு போக வன்பாறை  மட்டும் எஞ்சி நிற்கும் இதில் தூண்களாக ஒடுங்கிய இடைவெளிகளுடன் காணப்படுவதை  லாபீஸ் என அழைப்பர்.

செங்குத்தான மலை குன்று போன்று காணப்படுவதை காஸ்ட் கோபுரம் எனவும் கூம்பு வடிவில் உள்ளதை காஸ்ட் கூம்பு எனவும் அழைப்பர்.
Wikimedia Commons
File:Lapies de Innerbergli Habkern ...


02. போனார்

சுண்ணாம்பு பாறைகளின் மூட்டுக்கள் துளைகள் ஊடாக நீர் கீழே இறங்கும்போது பாறைகளின் பக்கங்கள் கரைந்து துளைகளை உருவாக்குகிறது அவ்வாறு தரைக்கீழ் நீர்  குகைகளுடன் இணைக்கும்  துளைகள் போனார் என அழைக்கப்படும்.


03. டொலைன்




சுண்ணாம்புக்கல் காணப்படும் பிரதேசங்களில் காணப்படும் புனல் வடிவில் உள்ள பள்ளம் டொலைன்  என அழைக்கப்பம்.
உறிஞ்சி துளைகளின் பக்கங்கள் கரைந்து அகன்றதாக கரடுமுரடான நீண்ட பள்ளங்களை உருவாக்குகிறது இவை மூடியது தூவாரமாக காணப்படும் இப் பள்ளங்கள்  அகன்று பெரிதாக மாறும்போது விலங்கு துளை என அழைக்கப்படும்.

04.உவாலாஸ் 



சுண்ணாம்புக்கல் பிரதேசத்தில் டொலைன்  இணைப்பினால் உருவான பரந்த அடிப்பாகத்தை உடைய தாழஂ நிலமே  உவாலா என  அழைக்கப்படுகிறது . அருகே உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சிறிய டொலைன் தொடர்ச்சியாக இடம்பெறும் கரைசலினால் பெரிதாகி இணைந்து விடுகின்ற போது இத்தகைய உவாலா தோற்றம் பெறுகிறது.

05.போல்ஜே

சுண்ணாம்புக்கல் பிரதேசத்தில் காணப்படும் தட்டையானது செங்குத்தான சுவர்களில் கொண்டதுமான நீள்வட்ட பெரிய பள்ளம் போல்ஜே    எனப்படுகிறது. நீண்ட தொடராக காணப்படும் பல  டொலைன் தொடராக ஒன்றினை அதன் மூலம் இத்தகைய  போல்ஜே தோற்றம் பெறுகின்றது  உவாலாஸ்களை விட பரப்பில் பெரியதாகவும் ஆழமானதாகவும் காணப்படும்.

ResearchGate
A typical karst polje in the dinaric ...



 

படிதல் நிலவுருவங்கள்

Pinterest
Earth science ...

Dreamstime.com
Karst Topography and Geological ...




    படிதல் நிலவுருவங்கள் விரைவில் பதிவிடப்படும் .
    காஸ்ட் பிரதேச பொருளாதார பயன்கள் விரைவில் .......

    Created By   universe 




     

     

    Post a Comment

    0 Comments