புவித்தொகுதி - Part 1


                                   புவித்தொகுதி



  • தொகுதி என்பது பலநூறு கூறுகள் ஒன்றோடு ஒன்று இடை தொடர்புபட்ட வகையில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லையினுல்  செயற்படும் அமைப்பு ஆகும் .
  •      இடை தொடர்புகளின் சக்தி பாய்ச்சலினை  பொறுத்து  பூமியை மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். 
                                                 01.தனித்தொகுதி

                                                 02.திறந்த தொகுதி 

                                                03. மூடிய தொகுதி

01..தனித்தொகுதி 

  • வெளிப்புற பரிமாற்றம் இல்லாத பௌதிக தொகுதியாகும் இங்கு மொத்த சக்தியும் சடப்பொருட்களும்  மாற்றப்படாமல் நிலையாக இருக்கும்.
  • தனது செயற்பாட்டுக்கு உரிய சக்தியும் பதார்த்தத்தையும் தனது தொகுதியின் உள்ளே பரிமாற்றம் செய்து கொள்ளும் தொகுதி தனித்தொகுதி ஆகும் .உதாரணம் ஞாயிற்றுத்தொகுதி

02. .திறந்த தொகுதி 

  • தொகுதியின் செயற்பாட்ட்டுக்கு  உரிய  சக்தியையும் சடப்பொருட்களையும்  வேறு தொகுதியிலிருந்து பெற்று செய்யப்பட்டு அச்சக்தியையும்  சடப்பொருட்களையும் வெளிப்படுத்தும் தொகுதி திறந்த தொகுதி எனப்படும்.   உதாரணம் ; ஆற்றுப்பகுதி
  • உலகில் அதிகமாக காணப்படக் கூடிய  தொகுதியும் இதுவாகும். 

03. மூடிய தொகுதி

  • செயல்பாட்டுக்கு தேவையான பதார்த்தங்களை பெறாது   சக்தியை மட்டும் பெற்று செயற்பட்டு மீளவும் சக்தியை வெளிவிடும் ஆயின் அது மூடிய தொகுதியாகும்    இதற்கு உதாரணமாக வளிமண்டல தொகுதியையும் புவித்தொகுதியையும்   குறிப்பிடலாம்
புவித்தொகுதியின் பிரதான உபதொகுதிகள்

புவியையும் அதனை சூழவுள்ள வளிமண்டலத்தையும் அங்கு காணப்படும் உயிர் உள்ள உயிர் அற்ற கூறுகளுக்கு இடையிலான பரஸ்பர தொடர்புகளின் காரணமாக அதனை புவித்தொகுதி எனப்பெயரிடலாம்.

புவித்தொகுதி முக்கியமாக 4 உபதொகுதிகள் ஆனது 

  1. கற்கோளம்
  2. நீர்க்கோளம்
  3. வளிக்கோளம்
  4. உயிர்க்கோளம் 


இவ்வாறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பினும் அவற்றுக்கு இடையில் இடைத்தொடர்பு நிலவுகிறது பிரதானமாக சக்தி மற்றும் பதார்தமாக பரிமாற்றி கொள்ளும் அடிப்படையில் ஒட்டுமொத்த புவி தொகுதியானது இத் தொகுதிகளுக்கு இடையிலான பிணைப்பு மற்றும் செயட்பாடுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இவ் ஒவ்வொரு உபதொகுதிகளும் மேலும் பல உபதொகுதிகள் இணைத்து அமைய பெற்றுள்ளது

 உதாரணம்;

 உயிர்த்திணிவு மற்றும் சூழல்தொகுதி உய்ரிகோளத்தின் உபதொகுதியாகும்  

அனைத்து உபதொகுதிகளுக்கும் இடையில் இடம் பெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரமாக அமைவது சூரிய சக்தியாகும்  .

01. கற்கோளம்

  கற்கோளம் எனப்படுவது புவியின் மேற்பரப்பாகும் புவியில் அமைத்துள்ள மலைத்தொடர்கள் மேட்டுநிலங்கள் போன்ற நிலப்படுக்கையும் சமுத்திரப்படுக்கை மற்றும் அதனுடன் கூடிய பாறைகளையும் கொண்ட புவியின் உட்பகுதி கொண்ட மண் பகுதி கற்கோளமாகும் .

கற்கோளத்தின் மேற்பகுதி ஓடு என அழைக்கப்படும்.
  1. கண்ட ஓடு      { சீயல் ஓடு}
  2. சமுத்திர ஓடு  {சீமா ஓடு} 
இப் படைகள் அமைத்திருப்பது மூடி மிதாகும் பாதி இறுகிய பாகுநிலை உள்ள அதி உயர் காந்த தன்மையுடைய கலவையால் ஆன ஒரு படையின் மேற்பகுதியாகும் இந்த ஓடு ...
 
ஆகவே கண்ட மற்றும் சமுத்திர தகடுகள் இம் மேற்பரப்பின் மீது மிதக்கின்றன 70km தொடக்கம் 670km வரை கற்கோளத்தின் தடிப்பு உள்ளது .

கற்கோளத்தின் பிரதான தொகுதிகளாக கண்டதிணிவு ,  சமுத்திரப்படுக்கை , கண்டங்கள் மீது அமைத்துள்ள மலைத்தொடர் , சமுத்திர படுக்கை மீது உள்ள இரண்டம் நிலவுருவங்களும் பாறை மற்றும் மண் ஆகியவற்றை கொள்ளலாம்.

கற்கோளத்தின் முக்கியத்துவம் 


  • கணிப்பொருட்களுக்கான ஓர் ஊடகமாக கற்கோளம் காணப்படுகிறது .
  • எரிபொருட்களை வழங்கும் பிரதான ஊடகம் .
  • மனித வாழ்க்கைக்கும் தாவர வளர்ச்சிக்கும் ஆதாரமாக கற்கோளம் காணப்படுகிறது .

02.நீர்க்கோளம்


சமுத்திரம் கடல் ஏரி நதி நீர்தேக்கங்கள் உட்பட மேற்பரப்பு நீர் மற்றும் உட்புறனீருடன் இணைத்த புவியின் மொத்த நீர்த்தொகுதி நீர்க்கோளம் என அறியப்படுகிறது இன் நீரின் அளவு 1386 கன மில்லியன் கியூபிக் மீற்றர் என அறியப்படுகிறது .  .
 
                                               புவிக்கோள நீர் பரம்பல் 


   சமுத்திர நீர்      நன்நீர் 
        97%                        3%
                                        ↓
   பனிப்போர்வையும் பணியரும்   79%
    தரை நீர்                                                  20%
    பயன்படுத்த கூடிய மேற்பரப்பு நீர்  1%
          ↓↓                                         
   ஏரி    52%
  மண்ணீர்   38%
  ஆற்றுநீர்    1%                                                                                                                 உயிர்வாழ் அங்கிகள்   1%                              
 வளிமண்டலநீராவி    8% 



                                          நீர்க்கோளத்தின் செயற்பாடுகள் 

கற்கோளத்தின் திண்மம் திரவம் வாயு வடிவிலும் வளிமண்டலத்தில் நீராவியாகவும் உயிர்க்கோளத்தில் தாவரங்கள் மற்றும் உயிர்களிலும் உள்ளடங்கி  காணப்படுகிறது இந் நீர் 4 உபதொகுதிகளுக்கும் இடையில் வட்ட செயன்முறையில் செயற்திறனுடன் ஒன்றோடு ஒன்று செயற்படுகிறது புவி தொகுதியில் இந் நீர் சுழற்சியாக செயற்படுவது நீரியல் வட்டம் என அழைக்கப்படுகிறது.


தொகுதிகளுக்கு இடையிலான நீர் பரிமாற்றம் 
  • சமுத்திர மற்றும் வளிக்கோளத்துக்கு இடையிலான நீர் பரிமாற்றம் 
  • மேற்பரப்பு நீர் மற்றும் வளிக்கோளத்திக்கு இடையிலான நீர் பரிமாற்றம் 
  • மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ்நீர் பரிமாற்றம் 






                                                 

சமுத்திர மற்றும் வளிக்கோளத்துக்கு இடையிலான நீர் பரிமாற்றம்  


மொத்த புவிக்கோளத்தினை கருதும் போது புவியின் மீது முக்கியமாக நீர் கடத்தப்படுவது சமுத்திர மற்றும் வளிக்கோளத்தை அடிப்படையாக கொண்டதாகும் உலகின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 100% என கருதினால் இதில் 77% கிடைப்பது சமுத்திரத்திற்ககும் அதே நேரம் சமுத்திரத்தில் இருந்து வளிமண்டலத்துக்கு சென்றடையும் ஆவியாக்க அளவு உலகின் மொத்த ஆவியாக்களின் 84%ஆகும் அளவு ரீதியாக கருதும் போது சமுத்திரங்களில் நிலையாக காணப்படும் நீரின் அளவு 1350000000m  கனம் ஆக அமையும் அதே நேரம் ஆவியாக்கம் மூலம் வளிமண்டலத்துக்கு சென்றடையும் அளவு 425000m கனம் ஆகும் .



மேற்பரப்பு நீர் மற்றும் வளிக்கோளத்திக்கு இடையிலான நீர் பரிமாற்றம்  

தரை பகுதிக்கு  கிடைக்கும் வருடாந்த படிவு வீழ்ச்சியான 23% அளவில் 16% மீண்டும் வளிமண்டலத்திற்கு ஆவியாக செல்லும் அதே நேரம் மிகுதி 7% நதிகள் மூலம் கழுவு நீர்ரோட்டமாக சமுத்திரங்களை சென்றடைகிறது இதற்கு மேலதிகமாக புவியின் மீது நிலையாக காணப்படும் நீரின் அளவு ஏறக்குறைய 35978000 கனம் ஆக அமையும் அதே நேரம் அந் நீரானது நதிகள் கடல்கள் நீர்தேக்கங்கள் என்பவை இத்தொகுதியின் கூறுகளாகும் . ஆவியாக்கம் மற்றும் படிவுவீழ்ச்சி என்பவற்றை சக்தி மற்றும்  பதார்த்த உட்பாய்ச்சலாக கருத்தாலம் .


மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ்நீர் பரிமாற்றம்   

தரைக்கீழ்நீர் எனப்படுவது புவியின் உட்பகுதியில் உள்ள நிராகும் புவி மேற்பரப்பு நீர் நிலையாக காணப்படுகின்ற நீர் நிலைகளில் இருந்தும் படிவுவீழ்ச்சியின் போதும் புவியின் உட்பகுதி ஊட்டுவழிதல் வடிவில் சென்றடையும் நீரும் புவியின் நிர்பீடம் வரையான அடி ஆழத்தில் உள்ள நீரும் தரைக்கீழ்நீர் என அறியப்படுகிறது . இந்த நீரின் அளவு 1200m கனம் வரையிலாகும்{world water 2007} இந் நீரில் உற்பத்தி 7%மழைவீழ்ச்சி மூலமும் 14%நிலையான நீர் நிலைகளில் இருந்தும் உட்பகுதிக்கு ஊட்டுவழிதல் இடம் பெறுகிறது .


தரைக்கீழ்நீரில் இருந்து ஆவியாதல் மூலம் நீர் இழக்கப்படுவது மிகவும் சொற்பமாகும் எனினும் இந் தரைநீர்ல் இருந்து கனிசமான அளவு புவியின் உட்பகுதிக்கும் சாய்வு வழியே நதிகளுக்கும் அதனுடாக உள்நாட்டு நீர் தேக்கங்களுக்கும் சமுத்திரங்களுக்கும் சென்றடைகிறது பெரும்பாலும் தற்காலிக நீர் பீடத்தில் அடங்கி உள்ள நீர் மழைக்காலங்களில் அதிகரிப்பதோடு மழைக்காலங்களில் மாத்திரம் பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது மிகவும் ஆழத்தில் அமைந்துள்ள நிலையான நீர் பீடத்தில் அமைந்துள்ள நீர் ஆழமான கிணறுகள் மூலம் மேற்பரப்புகளுக்கு கொண்டுவரப்படல் நிகழாவிடின் இழப்பு ஏற்படாது பெரும்பாலும் தற்காலத்தில் தரைக்கீழ்நீர் கூட மனித தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமையால் அந் நீரின் ஒரு பகுதியும் ஆவியாக்கள் மூலம் வளிமண்டலத்தை சென்றடைகிறது . 


                 நீர்க்கோளத்தின் முக்கியத்துவம் 
  • ஏராளமான வளங்களின் இருப்பிடமாக உள்ளது .
  • போக்குவரத்திற்கு உதவியாக உள்ளது .
  • நீரோட்டம் மூலமாக காலநிலையின் செல்வாக்கிற்கும் காற்றுகளின் சீரான இயக்கத்திற்கும் உதவிபுரிகிறது .
  • பல இடங்களின் நிலத்தோற்ற வளர்ச்சிக்கு நீர்க்கோளமே அடிப்படை காரணமாகியுள்ளது .



03.வளிக்கோளம் 








புவியின் வளிமண்டளமானது புவி மேற்பரப்பின் இருந்து ஏறக்குறைய 10,000km உயரம் வரை பரந்து உள்ளது 

புவியின் ஈர்ப்பு சக்தியினால் புவியுடன் இணைந்து காணப்படுகின்ற  கண்களுக்கு புலப்படாத ஒரு வாயு மண்டலம் 

வெப்பம் அமுக்கம் வளி அடர்த்தி போன்ற பண்புகள் வளி மண்டலத்தில் கீழ் பகுதியில் இருந்து மேல் நோக்கி செல்ல செல்ல வேறுபடும் 

வளிக்கோளத்தில் வானிலை மற்றும் காலநிலை செயற்பாடு இடம் பெறுகின்ற எல்லை என்பன நிலவுவது மத்திய கோட்டின் மேற்பகுதியின் 16km வரையும் துருவ பகுதியின் மேலாக 6km வரை பரந்து உள்ளது .





வெப்பநிலை வேறுபாட்டினை அடிப்படையாக கொண்டு வளிக்கோளம் 4 வகைப்படும் .
  1. மாறன் மண்டலம் 
  2. படை மண்டலம் 
  3. இடை மண்டலம் 
  4. வெப்ப மண்டலம் 
             


      அயன் மண்டலம் 

      படை மண்டலத்தின் உயர் மட்ட எல்லையை தாண்டிய பின் பின் அயன் மண்டலம் காணப்படுகிறது.
       
      அயன் மண்டலத்தின் உப பிரிவு 
      - இடை மண்டலம் 
      - படை மண்டலம் 

                      வளிமண்டலத்தின் முக்கியத்துவம்

      •  தாவர ஒளித்தொகுப்புக்கு அடிப்படை சக்தியை வழங்ககுகிறது.
      • மனிதன் உயிர் வாழ தேவையான ஓட்ஸிசனை வழங்ககுகிறது.
      •  நீரியல் வட்ட செயட்பாற்க்கு மூலமாக உள்ளது .
      • உயிர்கள் நிலைப்பிற்கு தேவையான சீரான வெப்பநிலை வழங்குகிறது.
      • ஒலி அலைக்களை செவிமடுக்க வளிமண்டலம் அவசியம் ஆகும் .

      04.உயிர்க்கோளம்  


      புவிக்கோளத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டினை கொண்ட படையே உயிர்க்கோளமாகும் 


       உயிர்க்கோள ஒழுங்கமைப்பின் மட்டம்  

      அங்கி 
           ⬇
        குடி 
           ⬇
      சாகியம் 
           ⬇
      சூழற்தொகுதி 
           ⬇
      உயிர்பெருந் திணிவு 


       உயிர்க்கோளத்தின் கூறுகள் 
      1. உயிருள்ள கூறு 
      2. உயிரற்ற கூறு   
      உயிர்க்கோளத்தின் பிரதான மூலகங்கள் 04
      1. ஐதரசன்
      2.  காபன் 
      3. ஒட்சிசன்
      4.  நைதரசன்

      சுற்றாடல் கூம்பு 3 வகைப்படும்
      1.  எண்ணிக்கை கூம்பு
      2.  உயிர்த்திணிவு கூம்பு
      3.  சக்திகூம்பு 
      போசணை மட்டம் 

      1.  முதலாம் போசணைமட்டம் = ஆரம்ப உற்பத்தியாக்கி 
      2. இரண்டம்   போசணைமட்டம் =  ஆரம்ப நுகரி 
      3. மூன்றாம்  போசணைமட்டம் = இரண்டம்  நுகரி 
      4. நான்காம் போசணைமட்டம் =  மூன்றாம்  நுகரி

       create by 
                 The Universe 
                      

       

      Post a Comment

      0 Comments