22 Mind Blowing facts about Brunei In Tamil

Brunei Flag 


  • தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவில் மலேசியா மற்றும் தென்சீனக்கடல் சூழப்பட்ட இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் உள்ள ஒரு சிறிய நாடு புருனே ஆகும்.
  • புருனே நாட்டின் முழு பெயர் புருனை தாருஸ்ஸலாம் ஆகும் இதன் பொருள் அமைதியான இடம் மற்றும் மக்கள் அதிகம் ஆயுட்காலத்தை கொண்டு வாழும் இடம் என பொருள்படும் .
  • உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் புருனே ஒன்றாகும். புருனே மக்கள் தொகை   450,000  க்கும் குறைவாக உள்ளது.
  • புரூனே நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பாலும்  முஸ்லிம்கள், சீனர்கள் (பொதுவாக பௌவுத்தம்)   கன்பூசியம் அல்லது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர்
  • புருனே நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக ஆங்கிலம் , மலாய் மற்றும் சீன மொழிகள் காணப்படுகிறது.
  • புருனே மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதிகாரபூர்வமாக மலாய் இனத்தவர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • புருனே சுல்தான்  ஹசனல் போல்கியா உலகில் மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பாளர் ஆக உள்ளார் இவரின் கார் சேகரிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது அவர் சேகரிப்பில் Ferrari, McLaren, Bugatti, Rolls-Royce, Bentley, BMW  போன்ற கார்கள் உள்ளன. 
  • 2013 ஆம் ஆண்டு சுறா மீன்களை வேட்டையாடக் கூடாது என தடை விதித்த முதல் ஆசிய நாடு புருணை ஆகும்.
  • தென்கிழக்கு ஆசியாவின் மூன்றாவது பெரிய எண்ணை உற்பத்தியாளராக புருனே  உள்ளது.
  • உலகில் திரவ இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்பதாவது இடத்தில் புருனே உள்ளது.
  • புருனேயில் 70% தாழ்நில மழைக்காடுகள் உள்ளன.
  •  புருனேயில் 5 முதல் 16 வயது வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உள்ளது.
  • இங்குள்ள மாணவர்களின் மொத்த தொகை 336,376  ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டின் தரவுகளின்படி  நாட்டில் 232 ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளும் 12 தொழில் நுட்ப மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களும் 7 பல்கலைக்கழகங்களும் உள்ளன.
  • புருனே நாட்டில் ஒரு மாதத்திற்கான ஆசிரியர் சம்பளம் 37,384.09LKR- 687970.64 LKR ஆகும்.
  • புருனே நாட்டில் 4 அரசு மருத்துவமனைகளும் மேலும் சுகாதார மையங்கள் 16-ம் 10 சுகாதார மருத்துவமனைகளும் உள்ளன.

  • புரூனே நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து ஆகும்.
  • IMF கூற்றின்படி புரூனே நாட்டின் தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வளங்கும் திறன் சமநிலையில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • புரூனே நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக Facebook (53.29%) உள்ளது.
  • ஜனவரி 2021   ஆம் ஆண்டு நிலவரப்படி புரூனே நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஏறத்தாழ 99 %  சமூக வலைதளம் பயன்படுத்துகிறார்கள்.
  • அனைத்து சாதனையாளர்களின் தேசிய பதிவுகளையும் தொகுத்து தரும் நோக்கத்துடன் 2017ஆம் ஆண்டு Brunei Book Of Recordes நிறுவப்பட்டது.
  • புருனே நாட்டின் இராணுவத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் ராணுவத்தில் சேர தகுதி அற்றவர்களாக காணப்படுகிறார்கள்.
  • Royal Brunei Air - Force என்பது புருணை சுல்தானின் விமானப்படை யாகும்.




The bond between the king and the people is inseparable' - The ScoopBrunei Malay in Brunei | Joshua Project




References







Post a Comment

11 Comments

  1. படிப்பதற்கு அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வாசிக்க தூண்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது
    நல்ல முயற்சி

    ReplyDelete
  4. Thiramayana thedal valthukal my dr student....

    ReplyDelete

Thank you!